Home » கிறவல் வீதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

கிறவல் வீதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

by mahesh
May 22, 2024 12:01 pm 0 comment

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் சிவ நாகதம்பிரான் மணல்வீதியை கிறவல் வீதியாக மாற்றுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார்.

அத்தியாவசிய மணல் வீதிகளை கிறவல் வீதியாக மாற்றும் திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கருவேப்பங்கணி பிரதேசத்தில் குறித்த வீதி கிறவல் வீதியாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

ரூ.4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 250 மீற்றர் நிளமும் 4 மீற்றர் அகலமுமான சிவ நாகதம்பிரான் மணல் வீதியே இவ்வாறு கிறவல் வீதியாக மாற்றப்படவுள்ளது.

இவ்வீதியினால் பாடசாலை மாணவர்கள், பிரதேசமக்கள் என பலரும் பயனடையவுள்ளனர்.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. கணேசமூர்த்தி, மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜீவரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT