Sunday, June 16, 2024
Home » இளவயதில் கலாநிதி பட்டம் பெற்ற இரு விரிவுரையாளர்கள்

இளவயதில் கலாநிதி பட்டம் பெற்ற இரு விரிவுரையாளர்கள்

by mahesh
May 22, 2024 11:10 am 0 comment

பாலமுனையைப் பிறப்பிடமாகவும், அக்கரைப்பற்றில் வசிப்பவருமான இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல்துறை விரிவுரையாளர் ஏ.எச்.றிபாஸ் மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தனது கல்வித்துறையின் கலாநிதிப் பட்டத்தை (Doctor of Philosophy) அண்மையில் பெற்றுக்கொண்டார்.

இவர் கலாநிதி பட்டத்தை தனது 33ஆவது வயதில் நிறைவு செய்துள்ளார். இளவயதுடையவராவார். இவர், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சஜிதா றிபாஸ் அவர்களின் கணவராவார். அதேவேளை அக்கரைப்பற்றைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளரும், உயர்நீதிமன்ற சட்டத்தரணியுமான ஆதம் லெப்பை முஹம்மத் றிப்கி தனது கலாநிதி பட்டப்படிப்பை உஸ்பெகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நிறைவு செய்து கொண்டார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆதம் லெப்பை மற்றும் வசீறா உம்மா தம்பதியின் புதல்வரான இவர், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) பழைய மாணவராவார்.

– றிஸ்வான் சாலிஹு 
(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT