Sunday, June 16, 2024
Home » சமூகப்பணியாளர் இதயராசா அரச பணியிலிருந்து ஓய்வு

சமூகப்பணியாளர் இதயராசா அரச பணியிலிருந்து ஓய்வு

by mahesh
May 22, 2024 11:00 am 0 comment

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிரேஷ்ட சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளரும், தலைமை முகாமையாளருமான கணபதிப்பிள்ளை- இதயராசா தனது அறுபதாவது அகவையில் (2024.05.23) இளைப்பாறுகின்றார்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள பூர்வீக கிராமங்களுள் ஒன்றான அன்னமலை கிராமத்தில் 1964.05.24 ஆந் திகதி அமரர்களான கணபதிப்பிள்ளை_ வள்ளியம்மை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வராக பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்திலும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் கற்றார்.

அதிபர் திலகம் அமரர் யோகம் வேலுப்பிள்ளையின் பதவிக் காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாக முகாமைத்துவமாணி பட்டப் படிப்புக்கு 1985இல் தெரிவான இவர் 1989 இல் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்

1992/93 ஆம் ஆண்டு காலப்பகுதியில் றெட்பானா நிறுவனத்தில் இணைந்து கரடியனாறு பிரதேசத்தில் கள இணைப்பாளராகப் பணியாற்றி போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மகத்துவமான சேவையினை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து 1996 ஆம் அரச சேவையில் இணைந்த இவர் சமுர்த்தி முகாமையாளராகவும் பின்னர் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளராகவும் பணியாற்றி தன்னை நாடிவரும் மக்களிளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பல்வேறுபட்ட சேமநல அமைப்புக்களில் பல பதவிகளை வகித்து வரும் இவர் தற்சமயம் கல்முனை தமிழர் கலாசாரபேரவையின் பொருலாளராகவும் கல்முனை நகர லயன்ஸ் (அரிமா) கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். எதிர்வரும் யூலை மாதம் இக்கழகத்தின் தலைவராகப் பதவியேற்கவுள்ளார்.

மேலும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் முன்னை மாணவர் சங்கத்தின் செயலாளராக சிறப்பாக பணியாற்றியதுடன். இப் பாடசாலையின் பழைய மாணவரான கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையிலான ‘மீண்டும் இணைவோம்’ உவெஸ்லியன் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

1994ஆம் ஆண்டு அன்னமலை கிராமத்தில் கமு/சது/ஸ்ரீசக்தி வித்தியாலத்தின் ஸ்தாபகர் என்ற பெயரை தனதாக்கிக் கொண்டார். இதற்காக தனது சொந்த நிதியை வாரி வழங்கியுள்ளார்.

– செல்லையா பேரின்பராசா
(துறைநீலாவணை நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT