Thursday, July 18, 2024
Home » தமிழகத்தில் 11 பேரை பலியெடுத்த மழை!

தமிழகத்தில் 11 பேரை பலியெடுத்த மழை!

by mahesh
May 22, 2024 6:00 am 0 comment

தமிழகத்தில் கடும் மழைக்கு 11 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மே 16 முதல் 20 வரை கனமழை காரணமாக தமிழகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடைகள் இறந்துள்ளன. 24 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT