Home » கனடாவிலிருந்து வந்த இருவர் கைது
தாக்குதல் சம்பவம்;

கனடாவிலிருந்து வந்த இருவர் கைது

by Gayan Abeykoon
May 22, 2024 8:27 am 0 comment

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம்  திங்கட்கிழமை அத்துமீறி நுழைந்த இருவர்,  வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவிலிருந்து வந்த இருவரே  கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக  சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து விசாரணையை  முன்னெடுத்த பொலிஸார்,  இச்சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவ்விருவரும் கனடாவிலிருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளதாகவும்  கொடுக்கல்,  வாங்கல் பிரச்சினை காரணமாகவே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தமது  ஆரம்பக்கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளதாகவும், பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT