Home » பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஊர்காவற்றுறையில் கைது

பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஊர்காவற்றுறையில் கைது

by Gayan Abeykoon
May 22, 2024 8:26 am 0 comment

முல்லைத்தீவு மாவட்ட நீதவான்  நீதிமன்றத்தால் சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அச்சந்தேக நபர் ஊர்காவற்றுறை பிரதேசத்தில்  பதுங்கியிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேக நபருக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதவான்  நீதிமன்றத்தால் ஐந்து பிடியாணைகள்  பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  ஊர்காவற்றுறை பிரதேசத்தில் இச்சந்தேக நபர் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸாரால்  சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இச்சந்தேக நபர், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  நிலையில் மாங்குளம் பொலிஸாரினூடாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை முற்படுத்த பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT