Home » பஸ்ஸில் தாலிக்கொடி திருட்டு; பொலிஸில் முறைப்பாடு

பஸ்ஸில் தாலிக்கொடி திருட்டு; பொலிஸில் முறைப்பாடு

by Gayan Abeykoon
May 22, 2024 7:25 am 0 comment

யாழ்ப்பாணம், சுழிபுரத்திலிருந்து   ஆறுகால் மடம் பிரதேசத்திலுள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் தாலிக்கொடி திருட்டுப் போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்திலேயே இப்பெண்ணினது தாலிக்கொடி திருட்டுப் போயுள்ளதாகவும், பொலிஸார் கூறினர்.

அண்மையில் ஆறுகால் மடம் பிரதேசத்தைச்  சேர்ந்த இப்பெண், பேருந்தில் சுழிபுரத்துக்கு  சென்றுவிட்டு, பின்னர்  அங்கிருந்து மற்றுமொரு  பேருந்தில் தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்தார். இதன்போதே அவரது  தாலிக்கொடி திருட்டுப் போயுள்ளது.   தனது தாலிக்கொடி திருட்டுப் போயுள்ளமை தொடர்பாக  மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக  மானிப்பாய் பொலிஸார் விசாரணையை  முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை பேருந்து பயணத்தின் போது பெறுமதியான தங்க நகைகளை அணிந்து செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பேருந்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணிப்பவர்கள் தொடர்பாக  அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT