311
தனது உடைமையில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சந்தேக நபர் விற்பனைக்காக ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண நகரிலிருந்து வடமராட்சிக்கு ஐஸ் போதைப்பொருள் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதாக நெல்லியடியிலுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இச்சந்தேக நபர் வல்லைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நாகர்கோவில் விசேட நிருபர்