Thursday, June 20, 2024
Home » குருக்களின் தங்கச்சங்கிலி திருட்டு; இருவர் கைது

குருக்களின் தங்கச்சங்கிலி திருட்டு; இருவர் கைது

by Gayan Abeykoon
May 22, 2024 5:20 am 0 comment

யாழ். சாவகச்சேரி, கெருடாவில் பிரதேசத்தில்  கடந்த வாரம் கோயில்  குருக்களின் தங்கச் சங்கிலி திருட்டுப் போன சம்பவம் தொடர்பாக இருவர் பொலிஸாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி குருக்களின் வீட்டுக்குச் சென்று அவரது தங்கச் சங்கிலியை அறுத்த  ஒருவரும்  அச்சங்கிலியை உருமாற்ற உதவிய  ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக, சாவகச்சேரி  பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி குருக்களின் வீட்டுக்கு   சாதகம் எழுத வேண்டுமெனக் கூறிச் சென்ற இருவர், அக்குருக்களை நெருங்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி  பொலிஸ் நிலையத்தில் குருக்கள் செய்த  முறைப்பாட்டை அடுத்து சி.சி.ரீ.வி, கமெராவின் உதவியுடன் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  அத்துடன்,  இச்சந்தேக நபர்களிடமிருந்து  மோட்டார் சைக்கிளையும் பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

சாவகச்சேரி விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT