Sunday, June 16, 2024
Home » The Students Visa நிறுவன ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கருத்தரங்கு

The Students Visa நிறுவன ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கருத்தரங்கு

by mahesh
May 22, 2024 7:30 am 0 comment

The Students Visa நிறுவனம் ஒழுங்கு செய்த உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கருத்தரங்கு அண்மையில் கொழும்பு The Hatch Works கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஐக்கிய இராச்சியத்தின் தனியார் உயர்கல்வி முறையை மையமாகக் கொண்ட குழுவினர் கலந்துரையாடல் “Educate to Elevate” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்வானது வெளிநாட்டில் கிடைக்கும் பரந்த கல்வி வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களின் உயர்கல்வி பயணத்தைத் தொடங்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இக் கருத்தரங்கில் Nitin Bhasson, Territory Manager for South Asia, University of East London , Kranthi Reddy, Regional Manager, University of Wolverhampton and Abhishek Kumar, Country Head UK, Infinite Group ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

கருத்தரங்கு The Students Visa நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரயீஸ் உல் ஹக் தலைமையில் நடைபெற்றது. The Students Visa பணிப்பாளர் மற்றும் Chief Operating Officer நுஸ்ரி மன்சூர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT