2024ம் ஆண்டின் முதல் காலாண்டில் கொமர்ஷல் வங்கியின் கடன் புத்தகம் 1.316 ட்ரில்லியன்களாகும். இலங்கை ரூபாவின் பெறுமதி பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அந்த காலப்பகுதியில் கடன் வழங்குவதில் கொமர்ஷல் வங்கி காட்டி வந்த தொடர் கவனம் கடன் புத்தகத்தில் இந்த நிலையை ஏற்படுத்தி ஐந்தொகையில் சுருக்க நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் குழுமம் அதன் கடன் புத்தகத்தில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 20 பில்லியன் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 2024 மார்ச் 31ல் முடிவடைந்த ஆண்டில் இந்த தொகை 129 பில்லியன்களாக இருந்தது. இதன் மாதாந்த சராசரி 10.75 பில்லியன்களாகும். மொத்தக் கடன் மற்றும் முற்பணங்களில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 10.87 வீதமாகும்.
இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கி வலையமைப்பு அதன் கிளைகள் மற்றும் இணை நிறுவனங்களை உள்ளடக்கிய கொமர்ஷல் வங்கி குழுமம் கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. வைப்புக்களின் பெறுமதி மிகக் குறைந்த அளவில் 0.33 வீதமாகி 2.141 ட்ரில்லியன்களாக 2024 முதல் காலாண்டில் உள்ளது. இதற்கு பிரதான காரணம் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நிலையாகும். ஆனால் கடந்த 12 மாத காலத்தில் இதன் வளர்ச்சி 117 பில்லியன் அல்லது 5.80 வீதமாகும். எவ்வாறாயினும் குழுமத்தின் மொத்த ரூபாய் வைப்பு 41.256 பில்லியன்கள் அல்லது 2.94 வீத வளர்ச்சியை 2024 முதலாம் காலாண்டில் காட்டி நிற்கின்றது.
மொத்த சொத்துக்களின் பெறுமதி 31 மார்ச் 2024ல், 2.616 ட்ரில்லியன்களாக உள்ளது இது 1.48 வீதம் குறைவடைந்துள்ளது. குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் நிலையைக் கருத்தில் கொணடு சொத்துக்களின் பெறுமதி வெளிநாட்டு நாணயத்தில் மீள் மதிப்பீடு செய்யப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.