Monday, July 22, 2024
Home » சிறந்த சேவையாளர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களை வழங்கி கௌரவிக்கும் ONL நிறுவனம்

சிறந்த சேவையாளர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களை வழங்கி கௌரவிக்கும் ONL நிறுவனம்

by mahesh
May 22, 2024 6:00 am 0 comment

இலங்கையின் முன்னணி அலுவலக தன்னியக்க தீர்வு வழங்குனரான வரையறுக்கப்பட்ட ஒஃபீஸ் நெட்வர்க் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் 2023/24 நிதியாண்டுக்கான வணிக இலக்குகளில் வெற்றியீட்டிய சிறந்த சேவையாளர் முகவர்களை கௌரவிக்கும் தனது வருடாந்த வணிக பங்குதாரர்களுக்கான விருது வழங்கும் வைபவத்தை 2024 மே மாதம் 15ஆம் திகதி புதன்கிழமை கொழும்பிலுள்ள மூவன்பிக் ஹோட்டலில் நடத்தியது.

இந்த விழாவில் வரையறுக்கப்பட்ட ஒஃபீஸ் நெட்வர்க் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களும் பங்குபற்றினர். அத்தோடு உலகப் புகழ் பெற்றஜப்பானிய Brand Brother நிறுவனத்தின் அண்மைக்கால மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கான தளமாகவும் இது அமைந்தது.

இலங்கையில Brother தயாரிப்புகளுக்கான உத்தியோகபூர்வ, அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் என்ற வகையில் தனது நம்பகமானதும் மேம்படுத்தப்பட்ட பல தயாரிப்பு மாதிரிகளோடு பரந்ததோர் சந்தையை தன்னகத்தே கொண்ட ONL நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது.

தனது வணிகப் பங்குதாரர்களின் மகத்தான பங்களிப்பையும் பெறுமதியையும் அங்கீகரிக்கும் வகையில்ஜகார்தா, இந்தோனேஷியாவுக்கு முழுமையான கட்டணங்கள் உள்ளிட்ட சுற்றுப்பயணத்தையும் சிறந்த செயற்திறன்களுக்கான பாராட்டுகளைப்பெ ற்றவர்களுக்கு ONL தனது பிரத்தியேக Brother Elite Business Club ஐயும் ஆரம்பித்து வைத்தது.

காலத்துக்குக் காலம் மாற்றங்களுக்குட்படும் உலகச் சங்தையின் தேவைகளை ஈடுசெய்ய தொடர்ந்தும் புதுமைகளைக் கொண்டு வருவதில் முன்னணியில் இருக்கும் Brother வணிக நாமம் உலகின் நவீன தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை அனைவருக்கும் வழங்குவதினூடாக உயர் உற்பத்திறன் மற்றும் தடையற்ற வணிகச் செயற்பாட்டு நடவடிக்கைகளை பேணி எப்போதும் ‘உம்மருகே’ இருக்க தயார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT