Home » சீரற்ற வானிலை: மின்கம்பி வீழ்ந்து அனர்த்தம்; மின்சாரத் தடை

சீரற்ற வானிலை: மின்கம்பி வீழ்ந்து அனர்த்தம்; மின்சாரத் தடை

by Rizwan Segu Mohideen
May 22, 2024 3:46 pm 0 comment

நாட்டில் ஏற்பட்டுள்ள தென்மேல் பருவபெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் கடும் காற்று, பலத்த மழையூடான வானிலை தொடர்ந்தும் நீடிக்கின்றது.

இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த, அம்பகமுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தொடர்ச்சியான மழையும் பலத்த காற்றும் வீசுகிறது.

இதன் காரணமாக வலப்பனை பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக வீசும் கடும் காற்றினால் வலப்பனை ரூபஹா, தெரிப்பெயே ஆகிய பிரதேசங்களில் வீதி ஓரங்களில் காணப்படும் பாரிய மரங்கள் மின் கம்விகள் மீது சரிந்து வீழ்ந்து மின் கம்பங்களும் உடைந்துள்ள நிலையில் இப்பிரதேசத்திற்கான மின் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருந்தது.

ஆ. ரமேஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x