Thursday, June 20, 2024
Home » பாராளுமன்றம் இன்று கூடுகிறது.

பாராளுமன்றம் இன்று கூடுகிறது.

by mahesh
May 22, 2024 8:30 am 0 comment

பாராளுமன்ற இன்று புதன்கிழமை (22) கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் (14) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அன்றைய தினம் மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.மே,14 இல், வௌியிடப்பட்ட வர்த்தமானியில் ‘பொருளாதார நிலை மாற்றம்’ மற்றும் ‘பகிரங்க நிதிசார் முகாமைத்துவம்’ ஆகிய இரண்டு சட்டமூலங்களும் முதலாவது வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன. இதையடுத்து மு.ப. 9.45 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை எதிர்கட்சியால் கொண்டு வரப்படும் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை மேற்கொள்ள, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT