Monday, July 22, 2024
Home » புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் விசேட விடுமுறை இரத்து

புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் விசேட விடுமுறை இரத்து

by mahesh
May 22, 2024 7:14 am 0 comment

மோசமான காலநிலை காரணமாக புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (22) வழங்கப்பட்டிருந்த விசேட விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் கௌரவ நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்காலநிலை பாதிப்பின் காரணமாக மாணவர்கள் எதிர்கொள்ள நேரும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் நேற்றும் (21) இன்றும் (22) விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது

இந்நிலையில் காலநிலை ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு மாற்றம் அடைந்துள்ளதால், கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க நாளைய தினம் வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவுறுத்தலை வடமேல் மாகாண ஆளுநர் கௌரவ நஸீர் அஹமட் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT