Sunday, July 14, 2024
Home » நீதிமன்ற கடமைகளுக்கு சமுகமளிக்காத ஊழியர் தொடர்பில் சட்ட நடவடிக்கை

நீதிமன்ற கடமைகளுக்கு சமுகமளிக்காத ஊழியர் தொடர்பில் சட்ட நடவடிக்கை

சிறைச்சாலை ஆணையாளருக்கு நீதவான் உத்தரவு

by mahesh
May 22, 2024 7:20 am 0 comment

இரண்டு தினங்களாக நீதிமன்ற கடமைகளுக்கு சமுகமளிக்காத ஊழியர்கள் தொடர்பில், சட்டபூர்வ நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் நேற்று முன்தினம் (20) மற்றும் நேற்று (21) ஆகிய இரு தினங்களிலும் நீதிமன்ற கடமைகளுக்கு சமூகமளிக்கத் தவறியவர்கள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், மாஜிஸ்திரேட் நீதவானை சந்தித்தபோதே மாஜிஸ்திரேட் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அந்த வகையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க கடமைக்கு சமுகமளித்த ஊழியர்களின் முழுமையான விபரங்கள் அடங்கிய அறிக்கையை, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மாஜிஸ்திரேட் நீதவானிடம் இதன் போது கையளித்துள்ளார்.

இந்த சந்திப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவானின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT