Thursday, July 18, 2024
Home » இலங்கை புலனாய்வுத்துறை உடனடி விசாரணை ஆரம்பம்
குஜராத்தில் கைதான ISIS நபர்கள்

இலங்கை புலனாய்வுத்துறை உடனடி விசாரணை ஆரம்பம்

by mahesh
May 22, 2024 7:10 am 0 comment

குஜராத் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு அணியால் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து அரசாங்கம் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கைதான நான்கு இலங்கையருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்,பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதா,இவர்கள் குஜராத் செல்வதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அரசாங்க புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இசசந்தேக நபர்கள், கடந்த(19) இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்தே கைதானவர்களின் பின்னணி மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். வலையமைப்புடனான தொடர்பு போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக இலங்கை புலனாய்வுப் பிரிவினர் இந்தியாவின் அரச புலனாய்வுத் துறையிடமிருந்து மேலதிக தகவல்களை கோரியுள்ளனர்.

இந்தியாவிடமிருந்து தகவல் கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நால்வரும் கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து அஹமதாபாத் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அவர்கள் தங்களின் வழிநடத்துநர்களுக்காக, விமான நிலையத்தில் காத்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்றி வருவதாக அமைச்சர் டிரான் அலஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT