Home » வாழ்க்கை எப்போதும் வாழத் தகுந்தது

வாழ்க்கை எப்போதும் வாழத் தகுந்தது

-திருத்தந்தை பிரான்சிஸ்

by Gayan Abeykoon
May 21, 2024 8:52 am 0 comment

வாழ்வில் எல்லாமே நீர்த்துப் போய்விட்டதுஇ இனி வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்று தோன்றினாலும்இ வாழ்க்கை எப்பொழுதும் வாழத் தகுந்தது என்பதை கூற விரும்புகின்றேன். காரணம்இ எதிர்காலத்திற்கான நம்பிக்கை அதில் எப்பொழுதும் இருக்கும். நம் ஒவ்வொருவரின் இருப்பும் முக்கியமானது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் வெரோனா நகருக்குத் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த சனிக்கிழமை மொந்தோரியோ  சிறைச்சாலையில் உள்ள சிறை உயர் அதிகாரிகள்இ சிறைக்கைதிகள் மற்றும் தன்னார்வலர்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் மறையுரை யாற்றினார் திருத்தந்தை.

சிறைக்குள் நுழைவது என்பது எப்போதுமே ஒரு முக்கியமான தருணம். ஏனென்றால் சிறை என்பது மனிதநேயத்தின் ஓர் இடம். சில வேளைகளில்இ மனிதநேயம் சோதிக்கப்படும்போதுஇ அது சிரமங்கள்இ குற்ற உணர்வுகள்இ தீர்ப்புகள்இ தவறான புரிதல்கள் மற்றும் துன்பங்களால் சுமையானதாக இருக்கிறது.

அதேவேளை வலிமைஇ மன்னிப்புக்கான மற்றும் தன்னை மீட்டுக்கொள்ளும் விருப்பத்தால் அது நிறைந்துள்ளது. இந்த மனிதநேயத்தில்இ இன்றுஇ இங்கே நம் அனைவரிடமும்இ  கிறிஸ்துவின் முகம்இ இரக்கமும் மன்னிப்பும் கொண்ட கடவுளின் முகம் பிரசன்னமாயிருக்கின்றது.

சிறைச்சாலைகளின் நிலைமை, அடிக்கடி நெரிசல், அதன் விளைவாக பதட்டங்கள் மற்றும் இன்னல்களால் நிறைந்திருப்பதை நாம் அறிவோம். இந்த சூழ்நிலையிலும் உங்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன் என்பதை  கூற விரும்புகிறேன். மேலும் சிறை வாழ்க்கையில் கைதிகள் எதிர்நோக்கும் குறைபாடுகளை களைய அதிகாரிகள் முன்வரவேண்டும். இச்சிறைச்சாலையில் சிலர் எதிர்பாராதவிதமாகஇ தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டதை அறிந்து நான் மிகவும் கவலையடைந்தேன். இது ஒரு கொடுமையான செயல். இது தாங்க முடியாத விரக்தி மற்றும் வலியை மட்டுமே ஏற்படுத்தும். எனவேஇ நான் உங்கள் குடும்பத்தினருடனும் உங்கள் அனைவருடனும் இறைவேண்டலில் ஈடுபடும்போதுஇ ​​மனச்சோர்வுக்கு ஆளாகாமல் இருக்க உங்களை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

எல்லாமே நீர்த்துப் போய்விட்டதுஇ இனி வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்று தோன்றினாலும்இ வாழ்க்கை எப்பொழுதும் வாழத் தகுந்தது என்பதை உங்களுக்குக் கூற விரும்புகின்றேன். காரணம்இ எதிர்காலத்திற்கான நம்பிக்கை அதில் எப்பொழுதும் இருக்கும். நம் ஒவ்வொருவரின் இருப்பும் முக்கியமானது. இது நமக்கும் மற்றவர்களுக்கும்இ அனைவருக்கும் ஒரு தனித்துவமான கொடை. கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடாதவர். உண்மையில் நமக்குச் செவிசாய்க்கவும்இ நமக்காக மகிழ்ச்சியடையவும்இ அழவும் தெரிந்தவர். அவர் நமக்காக நம் அருகில் இருப்பதால்இ நாம் விரக்தியைக் கடந்துஇ ஒவ்வொரு கணமும் மீண்டும் புதிதாக வாழ முடியும்.

எனவே, மோசமான தருணங்களில்இ நாமே நமக்குள் முடங்கிவிடாமல் நம் வலியைப் பற்றி கடவுளிடம் பேசுவோம். இந்தச் சிறை வாழ்வில் நமது தோழமை பயணத்தின் மத்தியில் நம் அருகிலிருக்கும் நல்ல மனிதர்களுடன் இணைந்து அந்த வலியைத் தாங்கிக்கொள்ள ஒருவருக்கொருவர் உதவுவோம். உதவி கேட்பது நமது பலவீனம் அல்ல. ஆகவே அதைப் பணிவுடனும் நம்பிக்கையுடனும் செய்வோம்.

அருட்பணி செல்வராஜ் சூசைமாணிக்கம் 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT