கத்தோலிக்கத் திருச்சபை புனித கன்னி மரியாள் திருச்சபையின் தாய் என்ற பெருவிழாவை நேற்றைய தினம் கொண்டாடியது.
திருச்சபையின் தாய் என்பது இயேசுவின் தாய் மரியாவுக்கு வழங்கப்படும் அடைமொழியாகும். நான்காம் நூற்றாண்டிலேயே முதன்முதலில் அம்புரோஸ் பயன்படுத்திய இந்த அடைமொழிஇ இரண்டாம் வத்திக்கான் சங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் திருத்தந்தை 6ம் பவுலால் அதிகாரப்பூர்வமானதாக அறிவிக்கப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் மரியாள் திருச்சபையின் தாய் என்ற விழாவை பெந்தகோஸ்து விழாவுக்கு அடுத்த நாள் சிறப்பிக்கும் வகையில் 2018ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தார்.
சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில் இயேசு தம் தாய் மரியாவையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம்இ “அம்மாஇ இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம்இ “இவரே உம் தாய்” என்றார். இந்த நிகழ்வின் வழியாக இயேசு தம் சீடர்களான கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தாயாக மரியாவை வழங்கினார் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கை.
சீடர்கள் அனைவரும் சில பெண்களோடும் இயேசுவின் சகோதரர்களோடும் இயேசுவின் தாய் மரியாளின் அரவணைப்பில் ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். பெந்தகோஸ்து என்னும் நாள் வந்தபோதுஇஅவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர் என்று திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம்.
முதல்முறை தூய ஆவியார் நிழலிட்ட வேளையில் இயேசுவைப் பெற்றெடுத்த மரியாள்இ இரண்டாம் முறை அவர் இறங்கி வந்தபோது திருச்சபையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு. இவ்வாறுஇ அவர் திருச்சபையின் தாயாக திகழ்கிறார். நமது தாய் திருச்சபை அன்னை மரியாளின் மகத்துவத்தை ஐந்து பெருவிழாக்கள்இ மூன்று திருவிழாக்கள் பதினேழு நினைவு நாட்கள் முலம் பறைசாற்றி குதூகலிக்கிறது. “அன்னை மரியாவை நாடாமல் இறையருளை பெறுவதற்கான விருப்பம் என்பது சிறகுகளின்றி பறக்க விரும்புவதைப் போன்றது.” என்றார் திருத் தந்தை 12ம் பத்தி நாதர்.
அமல உற்பவியாய் இ அழகின் முழுமை கொண்டவளாய்இஅலகையின் தலை மிதிக்க முன் குறிக்கப் பட்டவளாய்இ அகிலம் உருவாகும் முன்னரே ஆண்டவரின் திட்டத்தில் இடம் பெற்றவளாய்த் திகழ்ந்தவள் நம் அன்னைஇ
‘’ அருள் நிறைந்தவரே வாழ்க “ என்று ஆண்டவரின் தூதராலும் ‘’ பெண்களுக்குள் பேறு பெற்றவர் நீரே “ என்று அன்பு உறவினர் எலிசபெத்தாலும் அன்னை புகழ்ந்தேற்றப் படுகிறார்.
தாழ் நிலை நின்ற தன்னைஇ தலைமுறைகள் போற்றும் பேறுடையாளாக உயர்த்திய இறைவனின் கருணையை எண்ணி இதயம் களி கூர்ந்து அன்னையின் இதழ்கள் உதிர்த்தவையே இவ்வார்த்தைகள். “ என் ஆன்மா ஆண்டவராம் கடவுளை ஏற்றிப் போற்றுகிறது.”
தாழ்ச்சியையும் நன்றி உணர்வையும் நமக்கு உணர்த்தும் இவ்வார்த்தைகளை நாமும் நமது உள்ளத்தில் இறுத்தி ஆவியிலும் உண்மையிலும் அதனை தியானிப்போம்.
எல்.எஸ்.