Saturday, June 15, 2024
Home » காலநிலை மாற்றம் நீர் பிரச்சினை; ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்

காலநிலை மாற்றம் நீர் பிரச்சினை; ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்

யுத்த அழிவுகளுக்கு உதவியளிக்கும் நாடுகள் காலநிலை அழிவுகளைத் தடுப்பதற்கு உதவ வேண்டும்; -ஜனாதிபதி

by Gayan Abeykoon
May 21, 2024 1:00 am 0 comment

க்ரைனில் ஏற்படும் உயிர் அழிவுகளுக்கு நிதியளிக்க தயாராகவுள்ள உலகளாவிய வட துருவ நாடுகள், காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுக்கும் பணிகளுக்கு நிதியளிக்க பின்வாங்குவதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். 

இந்தோனேசியாவில் பாலி சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவரும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்விலேயே, ஜனாதிபதி நேற்று இதனை  தெரிவித்தார்.

இம்மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகளாவிய வரி ஏய்ப்புச் சொத்துக்களின் வருடாந்த இலாபம் 1.4 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த இலாபத்தின் மீது, காலநிலை மாற்ற நிதியத்திற்காக  பத்துவீதம் வரி விதிப்பதற்கான யோசனையையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

“பொது செழுமைக்கான நீர்” என்ற தொனிப்பொருளில் உலக நீர் உச்சி மாநாடு மே (18) இந்தோனேசியாவின் பாலியில் ஆரம்பமானது. உலக நாடுகளின் தலைவர்கள், நிபுணர்கள், கல்வியியலாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

1997 முதல், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலக நீர் உச்சி மாநாடு, உலகின் அனைத்து நாடுகளுக்கும் நீர் முகாமைத்துவம் தொடர்பான அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது.

மேலும் தண்ணீர், சுகாதார சவால்கள், நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பிலும் இம்மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படும்.

கூட்டு செழுமைக்கான நீர்” என்ற தொனிப்பொருள் அனைத்து உயிரினங்களினதும் உயிர்நாடியான நீர் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை முகாமைத்துவம் செய்வதற்கான கூட்டுப் பொறுப்பை வலியுறுத்துகிறது.

மேலும், இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மாநாட்டின்  ஐந்தாவது அமர்வில் இந்தோனேசியாவால் முன்மொழியப்பட்ட “நிலையான ஏரி முகாமைத்துவம்” யோசனைக்கு அமைவானதாக காணப்படுகிறது.ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் பேரவையின்  ஆறாவது அமர்வில், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் இணைந்து, “6/13 காலநிலை மாற்றம், உயிர் பல்வகைத்தன்மை குறைவடைதல், சுற்றுச்சூழல் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய நிலையான அபிவிருத்திக்கான நீர்க் கொள்கைகளைப் பலப்படுத்த தேவையான முழுமையான தீர்வுகள்” என்ற திட்டத்தை சமர்ப்பித்தது.

G20  தலைமையின் கீழ் உலக கூட்டு நிதியத்தை ஸ்தாபிக்க முன்வந்தமைக்காக இந்தோனேசிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

இதன் முன்னோடி உறுப்பினராக இணைய இலங்கையின் விருப்பத்தையும் தெரிவிக்கிறேன்.

காலநிலை மாற்றமும், தண்ணீர் பிரச்சினையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

தற்போதைய நீர்வள நெருக்கடிக்கு காலநிலை மாற்றத்தின் விளைவுகளே முக்கிய காரணம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் நீர் மூலங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு பாரிய நிதி வசதிகள் தேவைப்படுகின்றன.

காலநிலை மாற்றத்திற்கான நிதியளிப்புத் திட்டங்களுக்கு ஏற்ப, உலகளாவிய வட துருவ நாடுகள் துரதிஷ்டவசமாக தோல்வியடைந்துள்ளன. கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு முடிவடைந்த பின்னர் இதற்கான அரசியல் ரீதியான விருப்பத்தில் குறிப்பிடத்தக்க வரையறைகளை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT