Saturday, June 15, 2024
Home » அமெரிக்காவில் பூனைக்கு டொக்டர் பட்டம்

அமெரிக்காவில் பூனைக்கு டொக்டர் பட்டம்

by Prashahini
May 21, 2024 12:05 pm 0 comment

மாணவர்களுடன் நட்பாக பழகியதற்காக அமெரிக்க பல்கலை. ஒன்று பூனைக்கு டொக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

பொதுவாக இந்த மாதிரியான கௌரவ டொக்டர் பட்டங்கள் மனிதர்களுக்குத்தான் வழங்கப்படும். ஆனால் அமெரிக்காவில் ஒரு பல்கலைகழகத்தில் பூனைக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கியுள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை.

அமெரிக்காவில் உள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் வசித்து வருகிறது ‘மேக்ஸ்’ என்கிற பூனை. இது கடந்த 4 ஆண்டுகளாகவே இந்த பல்கலைகழகத்தில்தான் இருந்து வருகிறது. இந்த பூனை மாணவர்களிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் குப்பை தொட்டிகளை பொறுப்புடன் பராமரிக்கவும் செய்ததாக பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான் இந்த பூனையான மேக்ஸ்-க்கு வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக கௌரவ டொக்டர் பட்டம் வழங்கியுள்ளது. பூனையின் நற்குணங்களை பாராட்டி வெர்மாண்ட் பல்கலைக்கழகம் பூனைக்கு ‘Doctor of Litter-ature’ என்ற கௌரவ பட்டம் வழங்கியுள்ளது.

இனிமேல் இப்பூனை டொக்டர் மேக்ஸ் என அழைக்கப்படும் என சமூக வலைதளங்களில் பலர் எழுதிவருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT