Tuesday, July 23, 2024
Home » ஸ்ரீ கண்டி கதிர்காம ஆலய வருடாந்த வைகாசி விசாக தேர்த்திருவிழா

ஸ்ரீ கண்டி கதிர்காம ஆலய வருடாந்த வைகாசி விசாக தேர்த்திருவிழா

by Gayan Abeykoon
May 21, 2024 4:15 am 0 comment

இலங்கை திருநாட்டின் மத்திய  மாகாணத்தில் எழில் கொஞ்சும் கண்டி மாநகரில், புராதன வரலாற்றுச் சிறப்புமிக்க  அருள்மிகு ஸ்ரீ கண்டி கதிர்காம ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் வருடாந்த வைகாசி விசாக  தேர்த்திருவிழா விஞ்ஞாபனம் நாளை (22.05.2024 )புதன்கிழமை வைகாசி விசாக  தினத்தில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் தனது புத்தம் புதிய சித்திரத் தேரில் எழுந்தருளி கண்டி மாநகர் முழுவதும் பவனி வரத் திருவருள் கூடியுள்ளது.

22.05.2024 காலை 7.00 மணிக்கு பால்குட பவனி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும். காலை 9.30மணிக்கு அபிஷேக  ஆராதனை, பூஜை வழிபாடு, கணபதி ஹேரமம் நடைபெறும்.

பகல் 12.00 மணிக்கு அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 4.00மணிக்கு வசந்த மண்டப  பூஜை நடைபெறும். மாலை5.04 மணிக்கு இரதோற்சவம்  வெளி வீதி ஊர்வலம் நடைபெறும்.

நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT