Thursday, July 25, 2024
Home » மனித- யானை மோதல் விழிப்புணர்வூட்டுவதற்காக அம்பாறை மாவட்ட ஆதிவாசிகளுக்கு செயலமர்வு

மனித- யானை மோதல் விழிப்புணர்வூட்டுவதற்காக அம்பாறை மாவட்ட ஆதிவாசிகளுக்கு செயலமர்வு

by Gayan Abeykoon
May 21, 2024 8:44 am 0 comment

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆதிவாசிகள் அடிக்கடி காட்டு யானைகளின் மோதலுக்கு உள்ளாகி வருகின்றனர். மனித- காட்டுயானை மோதலி லிருந்து ஆதிவாசி சமூகத்தை பாதுகாக்கும் நோக்கிலும் அவர்களுக்கு விழிப்புணர்வூட்டவும் ஹெல்ப் ஸ்ரீலங்கா அமைப்பு அம்பாறை மாவட்டத்தில் செயலமர்வுகளை நடத்தி வருகின்றது.

மாதுருஓயா தேசிய பூங்காவில் சுமார் 350 முதல் 400 யானைகள் உள்ளன. மாதுரு ஓயா பெரியகுளத்தில் நன்னீரின் பெரும் பகுதி யானைகள் நீர் அருந்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மகாவலி சிஸ்டம் சி பிரதான திட்ட வரைபில் வரையறுக்கப்பட்ட யானை வழித்தடங்களில் திசை மாறி வழியை இழந்த யானைகள் அடிக்கடி அருகில் உள்ள வஸ்கமுவ தேசிய பூங்காவிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

யானைகள் சுதந்திரமாக திரியும் எலெகொடலீய வழித்தடம் இப்போது மனித வாழ்விடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் அடிக்கடி மனித- யானை மோதலுக்கு உள்ளாகின்றன.

இவ்வாறாக இந்தப் பிரதேசத்தில் சூரியபொகுண (தெஹியத்தகண்டிய) என்ற கிராமத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது.

தம்பானா கிராமம் இலங்கையின் பூர்வீக ஆதிவாசி (வேடர்கள்) மக்களின் தாயகமாகும். விஸ்வகீர்த்தி ஸ்ரீ வனஸ்பதி உறுவாரிகே வன்னில அத்தோ என இலங்கை ஜனாதிபதியினால் கௌரவிக்கப்படும் சர்வதேச ரீதியில் அறியப்பட்ட தலைவரின் தலைமையில் இந்த செயலமர்வு இடம்பெற்றது.

ஆதிவாசிகள் தனது பழங்குடியினருக்கு செயலமர்வின் காரணத்தையும் நோக்கத்தையும் ஆதிவாசிகளின் மொழியில் விளக்கினார்.

காட்டு யானைகள் சுதந்திரமாக வாழும் இடங்கள் மனிதர்களால் சேனைப்பயிர்ச் செய்கை என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்படுவதாலும், நகரமயமாக்கல் போன்ற குடியேற்றத்திற்காக இயற்கைக் காடுகள் கண்டபடி அழிக்கப்படுவதாலும் யானைகளின் போக்குவரத்து வழிப்பாதை தடைப்பட்டது.

இதுவே மனித யானை மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக ஆதிவாசிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT