Thursday, July 18, 2024
Home » அநுராதபுரம் மாவட்ட அபிவிருத்திக்கு ரூ. 517 மில். அரசினால் நிதி ஒதுக்கீடு

அநுராதபுரம் மாவட்ட அபிவிருத்திக்கு ரூ. 517 மில். அரசினால் நிதி ஒதுக்கீடு

இதுவரை 91 திட்டங்கள் பூர்த்தி

by Gayan Abeykoon
May 21, 2024 9:00 am 0 comment

அரசாங்கத்தின் பன்முக வரவு செலவுத் திட்டத்தின் அநுராதபுரம்  மாவட்ட அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல் அநுராதபுர மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தலைமையில் அநுராதபுரம் மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.

கடந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் அநுராதபுரம் மாவட்டத்திற்கு 517 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பிராந்திய ரீதியாக மேற் கொள்ளப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 1713 ஆகும்.  இவற்றில் தற்போது 961 பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.  இதுவரை 91 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டப்பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.                            அநுராதபுரம்  மாவட்டத்தின் ஏனைய வீதி அபிவிருத்தித் திட்டங்கள், அதன்  முன்னேற்றங்கள்,  கிராமப்புர வீதி அமைத்தல் போன்ற வளர்ச்சி நடவடிக்கைகள் பற்றியும்  இங்கு கலந்துரையாடப்பட்டன.

மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சுகத் நயானந்தா உள்ளிட்ட திட்டமிடல் துறையினரால் இத்திட்டத்தின் செயலாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.இக் கூட்டத்தில் தலைமை கணக்காளர் இ.எம்.சி. ஹேரத், பிராந்திய செயலாளர்கள், பிராந்திய செயலகங்களில் பணிபுரியும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், செயற்குழு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட திட்டமிடல் திணைக்கள அதிகாரிகள்ஆகியோர் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

திறப்பனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT