Wednesday, November 13, 2024
Home » பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு காஷ்மீரின் தற்போதைய சூழ்நிலையிலிருந்து இந்தியா ஒதுங்கி இருக்க முடியாது

பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு காஷ்மீரின் தற்போதைய சூழ்நிலையிலிருந்து இந்தியா ஒதுங்கி இருக்க முடியாது

by Rizwan Segu Mohideen
May 21, 2024 7:43 pm 0 comment

பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு காஷ்மீரின் தற்போதைய சூழ்நிலையில் இருந்து இந்தியா ஒதுங்கி இருக்க முடியாது, அங்குள்ள நிலைமை தொடர்பில் செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு காஷ்மீரின் (PoJK) அரசியல் ஆர்வலர் அம்ஜத் ஐயூப் மிர்சா கூறியுள்ளார்.

அங்கு நிலைமை கைமீறி வருவதால், பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீரின் மீது இந்தியா கவனம் செலுத்துமாறு அவர் அழைப்பு விடுத்தார்.அந்த மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் பாகிஸ்தான் படைகளை தெருக்களில் எதிர்கொள்கின்றனர் என்றும் பாகிஸ்தான் படைகள் மக்களை சுட்டுக் கொன்று வருவதாகவும், அண்மையில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டதாக வதந்தி பரவி, நிலைமை கைமீறி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு காஷ்மீரில் தற்போதைய சூழ்நிலையில் இருந்து இந்தியா ஒதுங்கி இருக்க முடியாது. இந்த சமயத்தில், எங்கள் மக்கள் போராடுகிறார்கள். பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு காஷ்மீர் முழுவதும் மக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். முழு பிரதேசத்திலும் அமைதியான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தான் பொலிஸ், பஞ்சாப் பொலிஸ், ஆசாத் காஷ்மீர் பொலிஸ் என அழைக்கப்படுபவர்களால் மக்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

“நிலைமை கைமீறி வருகிறது. நிலைமை ஏற்கனவே கையை மீறி உள்ளது. மேலும் இந்தியா இப்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் மீது தனது முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் மற்றும் கில்கிட்-பலுகிஸ்தான் உட்பட இந்த பிரதேசத்தின் சுதந்திரத்திற்கு உதவ வேண்டும்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

பிடியாணை இல்லாமல் வீடுகளுக்குள் போலீசார் நுழைவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், அவாமி கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர் சவுகத் நவாஸ் மிர் வீட்டிற்குள் எந்த உத்தரவும் இன்றி போலீஸார் நுழைந்ததாக அவர் கூறினார்.

“தற்போது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு-காஷ்மீர் மக்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் தெருக்களில் இறங்கி, பாகிஸ்தான் படைகளை எதிர்கொள்கிறார்கள். பாகிஸ்தான் படைகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.”
என்று அவர் மேலும் கூறினார்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீரின் நிலவரத்தை கருத்தில் கொண்டு செயல்படுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த அவர், “நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இது தொடர்பில் இந்தியா செயல்பட வேண்டும். இந்தியா செயல்பட வேண்டும். பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் கில்கிட்-பலுகிஸ்தானை விடுவிக்கும் முயற்சியை முடுக்கிவிடவில்லை என்றால், நமது சுதந்திரத்திற்கான இந்த பொன்னான வாய்ப்பு பறிபோய்விடும்.

தலைநகர் முசாபராபாத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் போராட்டங்கள் வன்முறையாக மாறியது.

“இறைவன் எம்முடன் இருக்கும் வரை உங்களால் எங்களைத் துன்புறுத்த முடியாது. எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள். மீண்டும் மக்கள் வீடுகளில் புகுந்து கைது செய்தால் அமைதி நிலை இருக்காது. இதை நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்.” என்று ஷௌகத் நவாஸ் மிர் கூறினார்.

மங்களா அணையில் இருந்து வரியில்லா மின்சாரம் மற்றும் கோதுமை மாவுக்கான மானியம் ஆகியவற்றைக் கோரி அவாமி நடவடிக்கைக் குழு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பல தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதன் விளைவாக, இரவு நேர போலீஸ் சோதனைகளால் வேலைநிறுத்தம் தூண்டப்பட்டது. முசாபராபாத், தாத்யால், மிர்பூர் மற்றும் பல பகுதிகளில் படையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் உச்சபட்ச பலத்தை பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் நிராயுதபாணியான பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT