Home » சட்டவிரோத மதுபானத்துடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

சட்டவிரோத மதுபானத்துடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

by Gayan Abeykoon
May 21, 2024 9:57 am 0 comment

திறப்பனை பொலிஸ் பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கும் உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை திறப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த உபபொலிஸ் பரிசோதகர் கவரக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவர் தங்கியிருந்த வீட்டில் சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட மதுபானம் எரிவாயு அடுப்பு அதனைக் காய்ச்ச பயன்படுத்திய செப்புச் சுருள் என்பனவைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT