Home » ஈரான் ஜனாதிபதியின் மரணம் குறித்து இரங்கல் செய்தி

ஈரான் ஜனாதிபதியின் மரணம் குறித்து இரங்கல் செய்தி

- ரணில், மஹிந்தவின் X தள பதிவு

by Prashahini
May 21, 2024 11:22 am 0 comment

ஈரான் ஜனாதிபதியின் மரணம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்த துரதிர்ஷ்டவசமான மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஈரானின் புதிய துணை ஜனாதிபதிக்கு அனுப்பிய செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவும் இலங்கையில் உள்ள ஈரான் தூதரகத்துக்குச் சென்று தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்த மரணம் தொடர்பில் தாம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தனது X பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உண்மையான நண்பரான ஜனாதிபதி ரைசி எப்போதும் நினைவுகூரப்படுவார் என சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, இந்நாட்டு ஈரான் தூதரகத்திற்கும் சென்று தனது அனுதாபங்களை தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT