Sunday, June 23, 2024
Home » லுணுகலயில் ஆற்றில் நீராடச் சென்ற பெண்ணொருவர் சடலமாக மீட்பு

லுணுகலயில் ஆற்றில் நீராடச் சென்ற பெண்ணொருவர் சடலமாக மீட்பு

- சந்தேகத்தின் பேரில் கணவர் உட்பட இருவர் கைது

by Prashahini
May 21, 2024 9:56 am 0 comment

லுணுகல பகுதியில் கும்புக்கன் ஆற்றில் நீராடச் சென்ற பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (19) பிற்பகல் லுணுகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனதாபுர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் லுணுகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதோடு, பெண்ணை அடித்து கொலை செய்த குற்றச் செயல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் நேற்று (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவரும், கொலை செய்ய உதவியவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 36 மற்றும் 45 வயதுடைய ஜனதாபுர உடபங்குவ பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

இதன்போது கணவரின் சித்திரவதையால் தனக்கு பாதுகாப்பு இல்லையென குறித்த பெண் ஏற்கனவே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் லுணுகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT