Saturday, June 15, 2024
Home » IPL 2024 SRH vs PK:பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

IPL 2024 SRH vs PK:பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

- போட்டியில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றிய வியாஸ்காந்த்

by Prashahini
May 20, 2024 11:23 am 0 comment

நடப்பு IPL 2024 சீசனின் 69ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் இப்போதைக்கு இரண்டாம் இடத்துக்கு அந்த அணி முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 214 ஓட்டங்கள்எடுத்தது. 215 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விரட்டியது. பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்தில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி உடன் இணைந்து 72 ஓட்டங்கள் கூட்டணி அமைத்தார் அபிஷேக் சர்மா. 18 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்து ராகுல் திரிபாதி வெளியேறினார். நிதிஷ் ரெட்டியுடன் 57 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் அபிஷேக். அவர் 28 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நிதிஷ் ரெட்டி 37 ஓட்டங்களில் அவுட் ஆனார். ஷபாஸ் அகமது 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கிளாசன், 26 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்துல் சமாத் 11 ஓட்டங்கள் மற்றும் சன்வீர் சிங் 6 ஓட்டங்கள் எடுத்திருந்தனர். 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ஓட்டங்கள் எடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.

நடப்பு சீசனின் கடைசி போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவை பொறுத்தே புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்கப் போகும் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தா? அல்லது ராஜஸ்தான் ரோயல்ஸ்ஸா? என்பது உறுதியாகும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணி முதல் குவாலிபையர் போட்டியில் கொல்கத்தா அணியுடன் விளையாடும்.

முதல் விக்கெட்டை கைப்பற்றிய வியாஸ்காந்த்:

IPL தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

போட்டியில் வியாஸ்காந்த் வீசிய 14 ஆவது ஓவரின் இரண்டாவது பந்துவீச்சில் பிரப்சிம்ரன் சிங் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

மேலும், விஜயகாந்த் வியாஸ்காந்த் IPL தொடரில் விளையாடும் இரண்டாவது போட்டி இதுவாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT