Sunday, June 16, 2024
Home » ரொக்கெட் எஞ்சின் தயாரிப்பில் இந்தியாவின் இஸ்ரோ சாதனை

ரொக்கெட் எஞ்சின் தயாரிப்பில் இந்தியாவின் இஸ்ரோ சாதனை

by Rizwan Segu Mohideen
May 19, 2024 12:24 pm 0 comment

3 டி அச்சு ரொக்கட் எஞ்சின் தயாரிப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சாதனை படைத்துள்ளது.

பி.எஸ் 4 எஞ்சினில் நீண்ட காலம் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் அதிநவீன சேர்க்கை உற்பத்தி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி எஞ்சின் உற்பத்தி மீள வடிமைக்கப்பட்டதன் ஊடாக இச்சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, தமிழ்நாடு, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் இந்த எஞ்சின் வெற்றிகரமாகப் பரீட்சிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் இஸ்ரோ அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், இச்சாதனையின் ஊடாக புதிய எஞ்சின் ஒரு தனித்துண்டாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் மூலப்பொருட்கள் 97 சதவீதம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதோடு உற்பத்தி நேரமும் 60 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் வரலாற்றில் இது மைற்கல் சாதனையாகும். கடந்த மே 09 ஆம் திகதி 665 வினாடிகளில் அதிநவீன சேர்க்கை உற்பத்தி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட திரவ ரொக்கட் எஞ்சினின் பரீட்சிப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதனால் Polar Satellite Launch Vehicle (PSLV) இன் மேல் பகுதிக்கு இந்த பி.எஸ்.4 எஞ்சின் பயன்படுத்தப்படும்.

வழமையான இயந்திரத்தையும் பொருத்துதல்களைம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த எஞ்சின் PSLV இன் நாலாவது கட்டத்திற்கு பாவிக்கப்படுகிறது. இதன் முதலாம் கட்டத்தின் மீள் செயற்பாட்டு கட்டுப்பாட்டு முறைமைக்கும் இதே எஞ்சின் பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT