Home » கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்களத்துக்கு மாவட்ட பணிப்பாளர் நியமனம்

கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்களத்துக்கு மாவட்ட பணிப்பாளர் நியமனம்

by Prashahini
May 19, 2024 12:20 pm 0 comment

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திற்கு நீண்ட இடைவெளியின் பின் நிரந்தர பிரதிப் பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்

நீண்ட காலமாக நிரந்தர பிரதி பணிப்பாளர் இன்றி செயல்பட்டு வந்த மேற்படி அலுவலகத்திற்கு நிரந்தர மாவட்ட பிரதிப் பணிப்பாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள விலங்கியல் வைத்தியர் எம்.எஸ் எம் .ஹாதி அலுவலகத்திற்கு விஜயம் செய்த போது அவருக்கு அங்கு கடமை புரியும் உத்தியோகத்தர்களினாலும். ஊழியர்களினாலும் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது .

அதன்பின்னர் விலங்கியல் வைத்தியர் எம் எஸ் எம் ஹாதி தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜவ்பர்கான் மட்டக்களப்பு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT