Home » மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

by Prashahini
May 19, 2024 5:16 pm 0 comment

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்றை தலவாக்கலை பொலிஸாரால் இன்று (19) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலமாக மீட்க்கப்பட்டவர் 18 வயதுடைய பெண் எனவும், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் ரத்தினகிரியை சேர்ந்த பெரியசாமி திலிஷினா எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் சடலம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகலவும், குறித்த சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பொலிஸார் கூறுகையில்,

மரணித்த மாணவி உயர் தர கல்வி பயிலுபவர் எனவும் அவர் நேற்று இரவு அவரது வீட்டில் படித்து கொண்டு இருந்தாகவும் காலையில் எழுந்து பார்த்த போது மகளை காணாததால் தந்தை தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் உயிரிழந்த பெண் தொடர்பில் விசாரணைகள் செய்து வருவதாகவும், இச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் தன்னுயிரை மாய்த்து கொண்டார் அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா நிருபர், ஆ. ரமேஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT