ஐம்பதாண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ள அசாமின் காசிங்கரா தேசியப் பூங்கா நடப்பாண்டில் அதிகூடிய வருமானத்தை முதற்தடவையாக ஈட்டியுள்ளது.
இதற்கு ஏற்ப 8.8 கோடி ரூபா நடப்பாண்டு வருமானமாகக் கிடைப்பபெற்றுள்ளதாக காசிரங்கா தேசிய பூங்காவின் பிரதேச வன அதிகாரி அருண் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி, பூட்டான் மன்னர் மற்றும் இரண்டு ஜனாதிபதிகள் இப் பூங்காவுக்கு அண்மையில் விஜயம் செய்தனர். அதன் பயனாக உல்லாசப் பயணிகள் மத்தியில் இப்பூங்கா பிரபல்யம் அடைந்துள்ளது. இப்பின்னணியில் தான் 2023-2024 சுற்றுலா நடப்பாண்டில் 3,27,493 உல்லாசப் பயணிகள் இப்பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் 13,929 பேர் வெளிநாட்டினராவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்குப் பெயர் பெற்ற பூங்காவாக காசிங்கரா தேசிய பூங்கா விளங்குவது குறிப்பிடத்தக்கது.