Home » பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததா?

பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததா?

by sachintha
May 18, 2024 10:40 am 0 comment

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த முதல் 10 ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சியின் காலகட்டத்திற்கு அடித்தளம் அமைக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

மோடியும் அவரது அரசும் அதிகாரத்திற்கு வந்தபோது இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சிப்பாதையில் இருந்தது. வளர்ச்சி மெதுவாக இருந்தது. முதலீட்டாளர் நம்பிக்கை குறைவாக இருந்தது. இந்திய பில்லியனர்கள் பலர் திவாலாகி, நாட்டின் வங்கிகள் மீது பெருமளவில் வராக் கடன்களின் சுமையை சுமத்தினார்கள். இதன் காரணமாக வங்கிகளின் கடன் கொடுக்கும் திறன் பலவீனமானது.

இப்போது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சி மற்றைய பெரிய பொருளாதாரங்களை விட அதிகமாக உள்ளது. அதன் வங்கிகள் வலுவாக உள்ளன. கொவிட் பெருந்தொற்றைச் சமாளிக்கவேண்டி இருந்தும்கூட அரசின் நிதி நிலைமை நிலையாக உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா பிரிட்டனை முந்தி ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. மோர்கன் ஸ்டான்லி ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 2027-ஆம் ஆண்டில் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை முந்தி இந்தியா மூன்றாவது இடத்தை அடையும் பாதையில் உள்ளது.

சந்தேகத்திற்கு இடமின்றி நாட்டில் நம்பிக்கைபூர்வமான சூழல் நிலவுகிறது. இந்தியா G20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. சந்திரனின் தென்துருவத்திற்கு அருகே ெராக்கெட்டை அனுப்பிய முதல் நாடாக இந்தியா ஆனது. மேலும் பல பெரிய நிறுவனங்களை (யூனிகார்ன்) உருவாக்கியது. ஏறுமுகமாக இருக்கும் பங்குச் சந்தைகள் நடுத்தர வர்க்கத்தின் செல்வத்தின் மீது ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவிற்கான ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) பொருளாதார தொலைநோக்கு பார்வையான ‘மோதினாமிக்ஸ்’ வேலை செய்வதாகத் தோன்றுகிறது. ஆனால் ஆழமாகப் பார்த்தால், நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது. நாட்டின் 140 கோடி மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வாழ்வாதாரத்தின் விளிம்பில் வாழும் நிலையில் மிக சிறந்த காலகட்டம் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது.

அப்படியானால் மோதினாமிக்ஸில் வெற்றியாளர்கள் மற்றும் தோற்றவர்கள் யார் யார்? டிஜிட்டல் மேலாண்மைக்கு மோடி அளித்த முக்கியத்துவம் நாட்டின் பல ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்றத் தொடங்கியுள்ளது.

இன்று நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் தொலைபேசிகளில் QR குறியீட்டைப் பயன்படுத்தி, ஒரு பக்கெட் பாணுக்குக் கூட வெறும் 20 ரூபாய் செலுத்தி ரொக்கப்பணமில்லாமல் பல தினசரி பொருட்களை வாங்க முடிகிறது.

இந்த டிஜிட்டல் புரட்சியின் அடிப்படையானது மூன்று அடுக்கு நிர்வாக அமைப்பு ஆகும். உலகளாவிய அடையாள அட்டைகள், ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் பணப்பரிமாற்றங்களை செயல்படுத்தும் கட்டணம் செலுத்தும் கட்டமைப்பு மற்றும் வருமான வரி தாக்கல் போன்ற பல முக்கியமான அணுகலை தனிநபர்களுக்கு அளிக்கும் தரவுக் களஞ்சியம் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த ‘டிஜிட்டல் அடுக்குகளுடன்’ கோடிக்கணக்கான வங்கிக் கணக்குகளை இணைப்பது நிர்வாகத்துறை தலையீடு மற்றும் ஊழலைக் குறைத்துள்ளது.

2021 மார்ச் மாதத்திற்குள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1%- இற்கு சமமான சேமிப்புக்கு டிஜிட்டல் நிர்வாகம் வழிவகுத்தது. அதிக பற்றாக்குறை இல்லாமல், சமூக மானியங்கள், நிதி உதவிகள் மற்றும் உள்கட்டமைப்பு உருவாக்கம் ஆகியவற்றில் செலவழிக்க இது அரசுக்கு வழியை ஏற்படுத்தியது. இந்தியாவில் எங்கு பார்த்தாலும், கிரேன்கள் மற்றும் ஜே.சி.பி இயந்திரங்கள் வேலை செய்வதைக் காண முடியும். அது சிதைந்து வரும் பொது உள்கட்டமைப்பிற்கு ஒரு பளபளப்பான தோற்றத்தை அளிக்கிறது.

இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடைந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

புதிய வீதிகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களை உருவாக்குவது மோடியின் பொருளாதாரக் கொள்கையின் மையமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் உள்கட்டமைப்புச் செலவினங்களுக்காக (மூலதனச் செலவு) ஆண்டுதோறும் 10,000 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவழிக்கப்பட்டுள்ளது.

2014 மற்றும் 2024-க்கு இடையில் கிட்டத்தட்ட 54,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட்டன. இது முந்தைய 10 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட வீதிகளின் நீளத்தை விட இருமடங்காகும். பல தசாப்தங்களாக இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்த நிர்வாக வர்க்கத்தின் தலையீட்டையும் அரசு கணிசமாக குறைத்துள்ளது.

சமீபத்தில் இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகனின் திருமணத்திற்கு முந்திய மூன்று நாள் கொண்டாட்டம், நாட்டின் புதிய சகாப்தத்தைப் பற்றிய ஒரு காட்சியைக் கொடுத்தது. மார்க் ஸக்கர்பெர்க், பில் கேட்ஸ் மற்றும் இவாங்கா ட்ரம்ப் ஆகியோர் கலந்து இதில் கொண்டனர். உலகளவில் பிரபலமான பாடகியான ரிஹானா ெபாலிவுட்டின் மிகப்பெரிய பிரபலங்களுடன் மேடையில் நடனமாடி இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதே நேரத்தில் அம்பானி இல்லப்பெண்கள், ஒருகாலத்தில் முகலாய பேரரசின் சேகரிப்பில் இருந்த வைரங்கள் மற்றும் நகைகளை அணிந்திருந்திருந்தனர்

இவையெல்லாம் வெளிப்படுத்துவது என்ன? இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளதென்பதுதான் இதன் அர்த்தமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT