Home » கிழக்குக்கு விஜயம் செய்த இந்தியாவின் குருமகா சந்நிதான ஆதீன பீடாதிபதி

கிழக்குக்கு விஜயம் செய்த இந்தியாவின் குருமகா சந்நிதான ஆதீன பீடாதிபதி

by sachintha
May 18, 2024 9:40 am 0 comment

இந்தியாவின் ஸ்ரீமத் பரசமய கோளறி நாதர் ஆதீன 39 ஆவது குரு மகா சந்நிதானபீடத் தலைவர் புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

அவர் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வட மாகாணம் பூராக 9 நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

முதல் நாள் விஜயம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றது.

அச்சமயம், முதலில் கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயம்,வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயம், வளத்தாப்பிட்டி பளவெளி சிவன் ஆலயம், மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயம், திராய்க்கேணி மாரியம்மன் கோவில், மாணிக்கமடு பிள்ளையார் ஆலயம், ஆலங்குளம் சிவன் ஆலயம், செங்காமம் பிள்ளையார் ஆலயம் போன்ற பின்தங்கிய எல்லைப்புற பாதிக்கப்பட்ட ஆலயங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமை பற்றி ஆராய்ந்தார்.

அவருடன் லண்டன் கற்பகப்பிள்ளையார் ஆலய சபையின் இலங்கைக்கான இணைப்பாளரும் இலங்கை அகிலன் பவுண்டேசனின் உதவிப்பணிப்பாளருமான கலாநிதி வி.ஆர். மகேந்திரன், அம்பாறை மாவட்ட சமய ஆர்வலர்களான முன்னாள் பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, சமூக செயற்பாட்டாளர் தா. பிரதீபன் ஆகியோரும் சுவாமிகளின் இந்திய பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

குறித்த ஆலயங்களின் வரலாறு தேவைகள் தொடர்பாக அந்தந்த ஆலய பரிபாலன சபையினருடன் கலந்துரையாடப்பட்டது.

காரைதீவு குறூப் நிருபர்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT