Home » பருவப் பெயர்ச்சிக்கான வானிலை விருத்தி; இன்று முதல் மழை அதிகரிப்பு

பருவப் பெயர்ச்சிக்கான வானிலை விருத்தி; இன்று முதல் மழை அதிகரிப்பு

- நாட்டின் பல இடங்களில் அவ்வப்போது மழை

by Rizwan Segu Mohideen
May 18, 2024 9:42 am 0 comment

– பெரும்பாலான இடங்களில் நண்பகலுக்கு பின் மழை
– சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

இலங்கையிலும் அதனைச் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய வானிலை அறிகுறிகள் காரணமாக, இன்று (18) முதல் சில நாட்களுக்கு மழை, காற்றின் நிலைமை மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT