Sunday, June 23, 2024
Home » இலங்கை மீனவர்கள் 14 பேர் இந்திய கடற்படையால் கைது
எல்லை தாண்டிய குற்றச்சாட்டில்

இலங்கை மீனவர்கள் 14 பேர் இந்திய கடற்படையால் கைது

by sachintha
May 18, 2024 10:30 am 0 comment

சர்வதேச கடல் எல்லையை தாண்டியதற்காகவும், மீன்பிடித்ததற்காகவும் ஐந்து படகுகளுடன் 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்திய கடற்பரப்புக்குள் 07 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கே 13 கடல் மைல் தொலைவில் 14 இலங்கை மீனவர்களை கடந்த வியாழக்கிழமை கைது செய்துள்ளதுடன், ஐந்து இலங்கை மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளதாகவும் இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் பருத்தித்துறையை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, வேதாரண்யம் கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT