Sunday, June 16, 2024
Home » முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் கைதான நால்வரும் பிணையில் விடுதலை

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் கைதான நால்வரும் பிணையில் விடுதலை

by sachintha
May 18, 2024 10:17 am 0 comment

திருகோணமலையில் மூதூர், சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் மூதூர் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (17) பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது. இவ்வழக்கு நகர்த்தல் பத்திரத்தின் மூலம் நேற்று விசாரணைக்காக மூதூர் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி, மேற்படி நால்வரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இந்நபர்களுடைய பிணைக்கான நகர்த்தல் விண்ணப்பத்தை சட்டத்தரணி நாகராஜா மோகன் நேற்று தாக்கல் செய்திருந்தார். இதற்கு ஆதரவாக சட்டத்தரணி புவிராஜசிங்கம் முகுந்தன், சட்டத்தரணி தேவராஜா ரமணன் மற்றும் சட்டத்தரணி சயந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸாரினால் நால்வருக்கும் எதிராக ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் 3 (1) இன் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அதற்கான போதியளவான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அதனை நீக்கிக் கொண்டு வழக்கை சம்பூர் பொலிஸார் நகர்த்தல் பத்திரத்தின் மூலம் தண்டனை சட்டக்கோவை பிரிவின் கீழ் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த பிணை விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தார். இவ்வழக்கு மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT