Thursday, July 25, 2024
Home » ஆளுநர் ஹாபிஸ் நஸீருடன் அலிசப்ரி ரஹீம் எம்.பி சந்திப்பு
புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பில்

ஆளுநர் ஹாபிஸ் நஸீருடன் அலிசப்ரி ரஹீம் எம்.பி சந்திப்பு

சில பிரச்சினைகளுக்கும் உடனடித்தீர்வு

by Gayan Abeykoon
May 17, 2024 8:08 am 0 comment

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை (15) குருநாகல் ஆளுநர் மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில், புத்தளம் மாவட்ட  அபிவிருத்தி, கல்வித்துறை முன்னேற்றம், ஆசிரியர் இடமாற்றம், புத்தளத்தில் ஆரம்ப பாடசாலையொன்றை உருவாக்குதல், புதிய பட்டதாரிகள் நியமனம்  மற்றும் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பிலும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினரினால் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனை அமைதியாக செவிமடுத்த ஆளுநர்,

மேற்படி பிரச்சினைகளை முடியுமானவரை விரைவாக தீர்ப்பதாகவும் அதுதொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து நிவர்த்தி செய்து தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமிடம் உறுதியளித்தார். உடனடியாக செய்ய முடியுமான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை பெற்றுக்கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.ஜௌசி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஏ.எச்.எம். பைரூஸ், சமூகவியலாளர் அதிபர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி, அதிபர் அஷ்ஷெய்க் சன்ஹீர் (கபூரி), புத்தளம் வலய கல்வி பணிமனையின் சித்திரப்பாட ஆசிரிய ஆலோசகர் கலாநிதி எம்.எம்.முஹம்மது உள்ளிட்ட கல்வியியலாளர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

புத்தளம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT