உடப்பு, ஆண்டிமுனையிலுள்ள ஸ்ரீகிருஷ்ணா ஆரம்ப பாடசாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்காக 08 இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாரியார் சட்டத்தரணி சமரி பிரியங்கா கடந்த (13) திகதி அதற்கான காசோலையை வழங்கி வைத்தார். நெளசர் பெளசியின் “சைடா “அமைப்பு மூலம் இந்நிதி வழங்கப்பட்டுள்ளது. பாடசாலையின் கட்டடவேலையின் முதலாம் கட்டம் நிறைவடைந்துள்ளதையடுத்து இரண்டாம் கட்டத்துக்கான நிதி வழங்கப்பட்டது. மூன்றாம் கட்டத்துடன் சுமார் 35 இலட்சம் ரூபாவுடன் நிர்மாணப்பணிகள் நிறைவடையவுள்ளன. பாடசாலையின் முன்னாள் அதிபர் க.தொண்டமான் காசோலையை பெற்றுக் கொண்டார். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.ரியாஸ், முன்னாள் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவர் க.தெட்சணாமூர்த்தி ஆகியோரும் இதன் போது கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
உடப்பு குறூப் நிருபர்உடப்பு ஆண்டிமுனை ஸ்ரீகிருஷ்ணா ஆரம்ப பாடசாலைக்கு நிதியுதவி
269
previous post