Thursday, July 25, 2024
Home » கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வரலாற்று நினைவுக்கல் திறப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வரலாற்று நினைவுக்கல் திறப்பு

by Gayan Abeykoon
May 17, 2024 7:55 am 0 comment

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வரலாற்று நினைவுக்கல் திறப்பு விழா அதன் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யு.பீ.சுளு சந்திரசேன தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் கலந்து கொண்டு நாடாவை வெட்டி நினைவுக் கல்லை திரைநீக்கம் செய்து வைத்தார்.

மேலும் நினைவுக் கல்லை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியை வழங்கிய பிரபல சமூக சேவையாளரும் தொழிலதிபருமான க.பிரகலதனின் சேவையைப் பாராட்டி வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

(துறைநீலாவணை நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT