Home » மட்டக்களப்பு மாவட்ட காணி பிணக்குகளை ஆராயும் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட காணி பிணக்குகளை ஆராயும் கலந்துரையாடல்

by Gayan Abeykoon
May 17, 2024 7:42 am 0 comment

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.   இதன்போது மயிலத்தமடு, மாதவனை மற்றும் எல்லையோர காணிப்பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதோடு மகாவலி அதிகார சபையினால் மாவட்டத்தில் மேற்கொள்ளவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் அறிக்கை செய்யப்பட்டது. மேலும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள் இணைந்து மாவட்ட எல்லைப்பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்து வைத்ததுடன், அப்பிரதேச மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காணிகளை பகிர்ந்தளிக்குமாறு இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் இதன்போது பணிப்புரை விடுத்திருந்தார்.   இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந், திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், மகாவலி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், நில அளவை திணைக்கள அதிகாரிகள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட  அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன், வன ஜீவராசிகள் திணைக்க உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT