Home » பாதுகாப்பு அச்சுறுத்துதல் குறித்து இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் கலந்துரையாடல்

பாதுகாப்பு அச்சுறுத்துதல் குறித்து இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் கலந்துரையாடல்

by Rizwan Segu Mohideen
May 17, 2024 8:24 am 0 comment

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) விரிவாகக் கலந்துரையாடியுள்ளன.

புதுடில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஷுமன் கருத்தரங்கில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை பாதுகாப்பு துறை நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இது தொடர்பில் இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் ஹெர்வ் டெல்பின் தமது ‘எக்ஸ்’ தளத்தில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்துக்கும் இடையிலான பாதுகாப்பு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாக உள்ளது. இது இந்தியா உள்ளிட்ட ஆசிய பங்காளர்களுடன் அதிக ஒத்துழைப்பைக் குறித்து நிற்கிறது.

பிரஸ்ஸலில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஷுமன் மன்றத்திற்கு முன்பாக புதுடில்லியில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், ஐரோப்பிய, இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் ஒன்றிணைந்து, பிராந்தியத்தின் பாதுகாப்பு, பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்தும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பிலும் கருத்து பரிமாறல்களை மேற்கொண்டுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு, இணையம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவென ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT