பூந்தொட்டிகளை உடைந்துள்ளதாகவும், பாடசாலை வளவுக்குள் இருந்த வாழை மரங்களை வேரோடு பிடுங்கி வீசியதாகவும், பாடசாலை கூரைகளை சேதப்படுத்தியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இம்முறை O/L பரீட்சைக்குத் தோற்றிய ஆனமடுவ கன்னங்கரா முன்மாதிரிக் கல்லூரி மாணவர்கள் குழுவொன்று இந்த நாசகார செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவர் குழுவொன்று மிகவும் கீழ்த்தரமான முறையில் பாடசாலை வளாகத்தை சேதப்படுத்தியுள்ளதாக பரீட்சைக்குத் தோற்றிய ஏனைய மாணவர்கள் கல்லூரி அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பாடசாலை வளாகத்தில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட , சேதங்களை ஏற்படுத்திய மாணவர் குழுவை அடையாளம் கண்டுகொண்ட பாடசாலை அதிபர் விமல் விஜயரத்ன, இதுபற்றி ஆனமடுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மாணவர்களும், அம்மாணவர்களின் பெற்றோர்களும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், அம் மாணவர்களால் பாடசாலைக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டன.
மேலும், பாடசாலை வளவு எவ்வாறு காணப்பட்டதோ அதுபோன்று அமைத்துக்கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதுடன், கடும் எச்சரிக்கையுடன் அம்மாணவர்கள் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த வருடம் ஆனமடுவ கன்னங்கர முன்மாதிரி பாடசாலையில் இருந்து ஏறக்குறைய 220 மாணவர்கள் O/L பரீட்சை எழுத பங்குபற்றியிருந்த போதிலும் அவர்களில் ஒரு சிலரே இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இம்மாணவர்களால் கன்னங்கர வித்தியாலயத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக ஏனைய மாணவர்களும், பெற்றோர்களும் கடும் விசனத்தை தெரிவிக்கின்றனர்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்