புத்தளம் வண்ணாத்திவில்லு சமகிபுர பகுதியில் இன்று (17) அதிகாலை இராட்சத முதலையொன்று தனியார் ஒருவரின் வீட்டு தோட்டத்தினுள் உட்புகுந்துள்ளது.
இதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு வனஜீவரசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் முதலையைப் பிடித்துள்ளனர்.
பின்னர் குறித்த முதலையை கல்வில சூழலியல் பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விடுவித்துள்ளனர்
குறித்த முதலை சுமார் 7 அடி நீளமுடையதும், சுமார் 100 கிலோ கிராம் எடை கொண்டதும் என கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் தினகரன் நிருபர்