Sunday, June 23, 2024
Home » மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் திறப்பு
நிலச்சரிவு அபாயம் காரணமாக,

மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் திறப்பு

- எந்த நேரத்திலும் குறித்த வீதி மீண்டும் மூடப்படலாம்

by Prashahini
May 17, 2024 11:49 am 0 comment

நிலச்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ், மிகுந்த அவதானத்துடன் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்றும் (17) மழை பெய்தால் இந்த வீதி மீண்டும் ஆபத்தானதாக மாறக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரித்துள்ளது.

எனவே, எந்த நேரத்திலும் குறித்த வீதி மீண்டும் மூடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளிலும் 100 மி.மீ இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக எல்ல – வெல்லவாய வீதி நேற்று (16) மாலை 6.00 மணி முதல் இன்று (17) காலை 6.00 மணி வரை முழுமையாக மூடப்படுமென இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்திருந்தது.

கற்பாறைகள் சரிதல் மற்றும் நிலச்சரிவு அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT