Home » பருவமழைக்கு முந்தைய வானிலை அறிகுறிகள் உருவாகி வருகிறது

பருவமழைக்கு முந்தைய வானிலை அறிகுறிகள் உருவாகி வருகிறது

- மழை, காற்று நிலை அதிகரிக்க வாய்ப்பு

by Rizwan Segu Mohideen
May 17, 2024 7:04 am 0 comment

– பல பகுதிகளில் நண்பகலுக்கு பின் மழை
– சில இடங்களில் 100 மி.மீ. அளவான மழைவீழ்ச்சி

இலங்கை மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பருவமழைக்கு முந்தைய வானிலை அறிகுறிகள் உருவாகி வருவதால் மழை மற்றும் காற்று நிலை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (17) நாட்டின் மேல், சப்ரகமுவ, கிழக்கு, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT