Sunday, June 23, 2024
Home » லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மைத்திரிக்கு எதிராக முறைப்பாடு

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மைத்திரிக்கு எதிராக முறைப்பாடு

by Gayan Abeykoon
May 17, 2024 9:50 am 0 comment

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு   தாக்கல் செய்யப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினரான மொன்டேகு சரத்சந்ரவே  இம்முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அவர் தெரிவித்துள்ள விடயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விற்று பெற்றுக்கொண்ட  முற்பணத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நட்டஈட்டை செலுத்தியுள்ளார். இந்நிதி எவ்வாறு  பெறப்பட்டது.இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவிட்டிருந்தது.  அதற்கிணங்க, ஒன்றரை கோடி ரூபாவை அவர் செலுத்தியுள்ள நிலையில், எஞ்சிய பணத்தை செலுத்த தம்மிடம் வசதி இல்லை என்றும்  பகுதி, பகுதியாக செலுத்த  பத்து வருடங்கள் கால அவகாசம் தருமாறும் மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   இத்தகைய பின்னணியில் கடந்த (13)   28 மில்லியன் ரூபா நிதி அவரால் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.  எஞ்சிய பணத்தை செலுத்த 10 வருடங்கள் கால அவகாசம் கோரியிருந்த நிலையில் திடீரென அந்த பணத்தை அவர் செலுத்தியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் அந்தப் பணம் ஈட்டப்பட்ட விதம் தொடர்பில் ஆராயுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரச்சந்திர, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டில் கேட்டுக் கொண்டுள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT