Thursday, July 25, 2024
Home » இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டம்

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டம்

by sachintha
May 16, 2024 10:14 am 0 comment

இஸ்ரேலின் ரபா தக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் அமெரிக்கா ஒரு பில்லியன் டொலருக்கு மேல் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த ஆயுதங்களில் டாங்கி குண்டுகள், மோட்டார்கள் மற்றும் மூலோபாய கவச வாகனங்கள் அடங்குவதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை அமெரிக்க பாராளுமன்றம் உறுதி செய்ததாக சி.பி.எஸ். செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அதற்கு அமெரிக்க பாராளுமன்றம் முதலில் ஒப்புதல் அளிக்க வேண்டும். காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேல் படையெடுத்தால் அதற்கான ஆயுதங்களை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜொ பைடன் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக 900 கிலோ குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்குவதை நிறுத்தி வைத்திருப்பதாக பைடன் நிர்வாகம் உறுதி செய்தது.

இஸ்ரேலுக்கு வழங்கிய சில அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதற்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை (10) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT