Home » 10ஆவது உலக நீர் மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இந்தோனேசியா பயணம்
“கூட்டு செழுமைக்கான நீர்” என்ற தொனிப்பொருளில்,

10ஆவது உலக நீர் மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இந்தோனேசியா பயணம்

by Prashahini
May 16, 2024 4:00 pm 0 comment

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் (18) இந்தோனேசியா பயணமாகிறார்.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்.

“கூட்டு செழுமைக்கான நீர்” என்ற தொனிப்பொருளில் 10 ஆவது உலக நீர் மாநாடு மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்தோனேசிய ஜனாதிபதி உள்ளிட்ட அந்நாட்டின் பல உயர்மட்ட பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதியுடனான விஜயத்தில் ஜனாதிபதி செயலக மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவொன்றும் இணைந்து கொள்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT